Wednesday 9 August 2023

THE FIRE

                                                            நெருப்பு!மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக கருதப்படும் நெருப்பு! அதை எப்படி தனக்கு வேண்டிய இடத்தில் ஆதிமனிதர்கள்! பற்றவைத்தார்கள்? என்பதை என்னுடைய மாறுபட்ட கர்பனையில் உருவான, மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, நிகழ்வுகளின் சுருக்கமே இக்கதை!

கி.பி.பி அல்லது பொ.ஊ.ஆ.பி 1983ல் பிறந்தவன், மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை கூறுவதென்பது நகைப்புக்குறியதே! நான் ஒப்புக்கொள்கிறேன், பல அறிஞர் பெருமக்கள்! எனக்கு முன்பாக கூறிச்சென்ற கருத்துக்களை படிஎடுத்து, அதில் கொஞ்சம் என் கருத்துக்களை கலந்து, அதற்கு வேறு வண்ணம் பூசி, மெருகேற்றி, உங்கள் முன் வைக்கின்றேன்! என் வாழ்நாளில்  என் சுய முயற்சியில், நானாக புதிதாக எதையுமே கண்டுபிடித்திடவில்லை! 

என்னுடைய கருத்துக்களுக்கு எந்தவித போதுமான ஆதாரங்களும் என்னிடம் இல்லை என்றாலும், என்னுள் எழும் எண்ணங்களை, பொது அரங்கில் பதிவு செய்வது எனக்கு பிடிக்கும்! அவ்வளவுதான்! அதனால், என் கருத்துகளை ஏற்பதும், எதிர்பதும், சிரிப்பதும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பமே!

அசைவப் பிரியர்களில் குறிப்பாக, ஆண்களின் நாக்குதான், இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன உலகம் உருவாக, காரணமாக இருந்திருக்ககூடும்! அதாவது, கொட்டை பொறுக்கி திண்றவர்கள், கொய்யாக்கா பறித்து திண்றவர்களாகிய சைவ பிரியர்கள் இதில் பங்கு பெறவில்லை! என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து! 

சரி வாங்க,  பெண்களின் நாக்கு! என்பதை பற்றி ஒரு குட்டி கதையை பார்த்துவிட்டு பின்பு, மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செல்வோம்!

ராஜசூயை யாகத்திற்காக, புதிதாக கட்டிய மாய மாளிகையை சிறப்பிக்க, சுற்றியுள்ள அனைத்து அரசர்களையும் அழைத்தார்கள் பஞ்ச பாண்டவர்கள்!விழாவிற்கு பெரும் அரசர்கள் கூட்டமே வந்திருக்க, அதில் பிரதான விருந்தினர்களில் ஒருவராக  வந்திருந்த, துரியோதனன்! அந்த மாய மாளிகையை சுற்றிப்பார்க்கும் போது, அங்கு நீர் இருப்பது போல் உள்ள இடத்தில் மெதுவாக கால் நனைக்க முயச்சித்தான், ஆனால் அங்கு நீர் இல்லை!

தரை என்று நினைத்து கால் வைத்த இடத்தில், "தொபக்கடி" என்று நீருக்குள் விழுந்தான்! துரியோதனன் முன்பு யாரும் சிரிக்க மாட்டார்கள், அதுவும் அவனை பார்த்து ஏலனமாக சிரிக்க, எவருமே இல்லை!

யாக குண்டத்திற்குள்ளிருந்து பிறந்து வந்ததால், "யாகசேனி" என்று கிருஷ்ணரால் பெயர் பெற்ற திரௌபதிக்கு, முழுமையாக தெரியாது துரியோதனனைப் பற்றி!

எல்லோரும் முன்பாக, குபீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சிரித்துக்கொண்டே திரௌபதி உறக்கக் கூறினாள், "குருடனின் மகன் குருடன்" என்று!அந்த நேரத்தில் துரியோதனன் நிலை எப்படி இருந்திருக்கும்! ஏன் அவ்வாறு கதையின் திருப்புமுனையை கொண்டுபோய், பாவம் திரௌபதியின் நாக்கில் வைத்தீர்கள் என்று, "வேதவியாச பகவானிடம்தான்" கேட்க வேண்டும்!

என்னதான் யார் விரோதிகள் ஆகினும், விருந்திற்கு அழைத்து அவமதிக்க கூடாது! சாக்கடை என்று தெரிந்தால், அதன் மீது கல் வீசக்கூடாது!  நினைவில் கொள்க!

சரி வாங்க, நம்முடைய கதைக்கு செல்வோம்! காட்டுத்தீ என்பது, எப்படி தானாக உருவாகிறது?

* மின்னல் தாக்கத்தினால் மரம் எரியும்!

* எரிமலை வெடித்தால் நெருப்பு உருவாகும்! 

* வின் கற்கள் விழும் இடத்தில் நெருப்பு உருவாகும்!

* பாறைகள் நகரும் பொழுது, அழுத்தத்தால்  வெப்பம் உருவாகி அதிலிருந்து நெருப்பு உருவாகும்!

* வேதியல் ரசாயங்களின் சேர்மங்களினாலும் நெருப்பு உருவாகும்!

* உராய்வினால் நெருப்பு உருவாகும்!

* புற்களின் நுனியில் உள்ள  ஒரு பனித்துளி மீது காலை சூரியன்! படும்பொழுது, அதன் பின்னால் காய்ந்த சருகுகள் இருந்தால், நெருப்பு உருவாகும் என்பதை, நான் டிஸ்கவரி செனலில் பார்த்திருக்கிறேன்!

இன்னும் பல வழிகள் இருக்கலாம், எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்!

ஆதிகாலங்களில் காட்டுத்தீ தானாக உருவாகும் பொழுது, அனைத்து உயிரினங்களுமே பயந்தோடும்! காட்டுத்தீ எரிந்து அடங்கிய நேரத்தில்,  நெருப்பில் மாட்டிக்கொண்டு உயிர்விட்ட, உயிரினங்களின் வெந்த சதைப் பற்றுகளை, அவ்வழியே வந்த உணவைத் தேடித்திரியும் கூட்டம் கண்டு, அதை சுவைத்துப்பார்க்க அவைகளின் மனம் தூண்டியது! அதன் சுவை  அற்புதமாக இருக்கவே, வெந்த கறித்துண்டுகளுக்காக, பெரும் சண்டை நடந்தது! 

பிறகு எப்போதெல்லாம் காட்டுத்தீ! பற்றி எரிகிறதோ, அப்பொழுதெல்லாம் நெருப்பின் அருகில் செல்ல முயன்ற மற்றும் எப்பொழுது காட்டுதீ! பற்றி எரியும்? என்ற எதிர்பார்ப்புகளுடன் சுற்றித்திரிந்த முதல் உயிரினம்தான் மனிதன்! இப்படியாக சில நூற்றாண்டுகள் கடந்தது!

இதன் அடுத்தபடியாக, அப்படி காட்டுத்தீ பற்றி எரியும்பொழுது, அந்த நேரத்தில் தாங்கள் வேட்டையாடி உண்டு, மீதம் வைத்திருக்கும் பச்சை மாமிச துண்டுகள் கைவசம் வைத்திருந்தால், அதை நெருப்பில் வீசிஎறிந்து, பின்பு நெருப்பு அடங்கியதும், ஓடிச்சென்று சுட்ட கறித்துண்டுகளை, சுவைத்து மகிழ்ந்தனர்! இப்படியாக சில நூற்றாண்டுகள் கடந்தது!

இதன் அடுத்தபடியாக, நெருப்பை தொடர்ந்து எரியச்செய்யவேண்டும் என்பதற்காக, அதில் மீண்டும் மீண்டும் விறகுகளை  இட்டுக்கொண்டே இருந்தனர். மழை வந்தால், திறந்த வெளியில் நெருப்பை தொடர்ந்து எரியச்செய்ய வழி தெரியவில்லை! என்பதனால், மீண்டும் எப்பொழுது காட்டுத்தீ! பற்றி எரியும், என்ற எதிர்பார்புகளுடன் சுற்றித் திரிந்தான் மனிதன்! இப்படியாக சில நூற்றாண்டுகள் கடந்தது!

இதன் அடுத்த படியாக, மழையில் நனைந்து நெருப்பு அணைந்து போவதை தவிற்க, முதல் முறையாக ஒரு கொள்ளிக் கட்டையை கையில் எடுத்துக்கொண்டு குகைக்குள் ஓடினான் மனிதன்! அதுவரை எந்த உயிரினமும் செய்து பார்க்க நினைக்காத ஒன்றை மனித இனத்தில் ஒருவர் செய்திருக்ககூடும்! வீர தீர பராக்கிரம செயலை செய்த அவரையே, தலைவராக தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்கள்! 

நெருப்பை எவ்வாறு கையாள வேண்டும், அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என்பது பற்றி இளம்  தலைமுறைகளுக்கு கற்றுத்தரப்பட்டது!

* நெருப்பினால், சுவையான உணவு கிடைத்தது! 

* இரவு நேரங்களில், நெருப்பின் அருகில் இருக்கும் வரை பயம் வருவதில்லை!

* நெருப்பை கொண்டு, மற்ற மிருகங்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடிந்தது! 

* நெருப்பு, குளிர் காய உதவியது!

இவ்வாறாக நெருப்பின் பயன் ஒவ்வொன்றாக, அதிகரித்துக் கொண்டே சென்றது!

இதன் அடுத்த படியாக, குகைக்குள் நெருப்பை தொடர்ந்து எரியச்செய்வதற்கான மூலப் பொருள்கள் தீர்ந்து போயிருக்கலாம், அல்லது நன்றாக "உண்டுகழித்து" உறங்கியிருப்பார்கள் போலும், மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது, நெருப்பு அணைந்திருக்கலாம்! 

பிறகென்ன! நெருப்போடு அதீத காதல் கொண்டிருந்த மனிதர்கள்! மரங்களின் உச்சியில் ஒரு கூட்டமாக, மலைகளின் உச்சியில் ஒரு கூட்டமாக, அடர்ந்த காடுகளில் ஒரு கூட்டமாக, பிரிந்து சென்று எங்காவது நெருப்பு பற்றி எரிகிறதா? என்று தேடிக்கொண்டேயிருந்தனர்! இப்படியாக சில நூற்றாண்டுகள் கடந்தது!

எவ்வளவோ காலங்கள் காத்திருந்து, பெரும் சிரம்மங்களை கடந்து, பற்றி எரிகின்ற காட்டுத்தீயிலிருந்து, கொண்டுவந்த சிறிய நெருப்பு துண்டுகளை, தங்களின் கவனக்குறைவால், தொடர்ந்து எரியச்செய்ய முடியாமல் தவித்தனர்! 

மீண்டும் காட்டுத்தீயை தேடிச்சென்ற மனிதர்கள், அடர்ந்த காட்டிற்குள் அமர்ந்துகொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தனர்! அப்பொழுது காய்ந்த மரக்கிளைகள் அல்லது காய்ந்த மூங்கில்கள் காற்றில் அசைந்து ஒன்றோடொன்று உரசிக்கொண்டே இருந்தது! அதிலிருந்து லேசாக புகை வந்து, மேலும் தொடர்ந்து  புகை அதிகரித்து, அதுவே நெருப்பாக மாறுவதை, அக்கூட்டத்தில் ஒருவர் கவனித்திருக்கலாம்!

பின்பு அங்கு உருவான நெருப்பை தங்கள் குகைக்கு எடுத்துச் சென்று, கொண்டாட்டமாக, கோலாகலமாக, குதூகலமாக ஆளுக்கொரு தீப்பந்ததை கையில் எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்!

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நெருப்பு மீண்டும் அணைந்து போகவே, மனமுடைந்த அவர்கள் நெருப்பை தேடிச் செல்ல தயாரான பொழுது, தன்னிடம் உள்ள மூங்கில் குச்சிகளை உடைத்து, அதை ஒன்றன் மீது ஒன்றை வைத்து தேய்க ஆரம்பித்தார், அன்று நெருப்பு உருவாவதை நேரில் கண்ட மனிதர்! 

சுற்றியுள்ள மனிதர்களின் கேலிச் சிரிப்பையும், குச்சிகளை தேய்பதனால் கைகளில் ரத்தம் சொட்டுவதையும் பொருட்படுத்தாமல், அதிலிருந்து புகை வருகிறதா? என்பதிலேயே கவனமாக இருந்த மனிதனின் கன்னங்களில் முதன்முதலாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது!

ஒரு வழியாக நெருப்பை தனக்கு வேண்டிய இடத்தில், பற்றவைத்துக்கொள்ளும் யுக்திகளை மனிதன் கற்றுக்கொள்வதற்கு, பத்தாயிரம் ஆண்டுகள்! கால அவகாவசம் தேவைபட்டிருக்கலாம்! பறவையை கண்டு விமானம் படைக்க, மனிதனுக்கு மூன்று இலட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது! 

மனிதன்! லேசாக ஈரப்பதம் கொண்ட மண்மீது நெருப்பை மூட்டியிருந்தால், அதனால் மண் சுடுபட்டு பாளம் பாளமாக இருப்பதையும், அது நீரில் நனைந்தாலும் கரைவதில்லை என்பதனால், ஓடு போன்ற அந்த பாளங்களில் உணவு பொருள்களை வைத்து உண்ட பிறகு, தனக்கு வேண்டிய வடிவங்களில் எல்லாம்,  மண் கொள்கலங்களை செய்யத்துவகியிருப்பான் மனிதன்!

இப்படியே +மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கும்  மூவாயிரம் பக்கங்களுக்கு நீட்டிகொண்டே செல்லக் கூடிய, கற்பனை வளம் என்னிடம் இருந்தாலும், கதையை இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்!

என்னுள் எழும் கேள்விகள் என்னவென்றால்,

* தானாக பற்றி எரிந்து, அணைந்த காடிற்குள் என்ன இருக்கும்? 

* மேலாக கிடந்த வெந்த கறியை தவிர்த்து, சுடுபட்ட உருளை கிழங்கும், மரவள்ளி கிழங்கும், பனக்கிழங்கும், வேர்கடலையும் மனிதனுக்கு கிடத்திருக்குமா?

* எதை திண்றதால், மனிதனின் மூளை செல்களில் மட்டும், முடுக்கம் ஏற்பட்டது?

* 84 இலட்சம் வகை உயிரினங்களில், மனிதன் மட்டும் நெருப்பின் அருகில் செல்ல, சுவையான உணவித்தவிற வேரென்ன காரணம் இருந்திருக்ககூடும்?

* உயிரினங்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளில், மனிதனை தவிர வேரெந்த உயிரினங்களும், ஒரு முறை கூட வெந்த கறித்துண்டுகளை சுவைத்துப் பார்த்ததே இல்லையா?

* மனிதன்! நெருப்பின் அருகில் செல்வதையும், வெந்து தணிந்த காட்டிற்குள் சென்று எதையோ பொறுக்கித் திண்பதையும், நெருப்பை கையாள்வதையும், நெருப்பை தனக்கு வேண்டிய இடத்தில் பற்றவைத்துக்கொள்ளும் செயல் முறைகளையும், அந்த நேரத்தில் உயிர் வாழ்ந்த மற்ற உயிரினங்கள், மனிதனைப் பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கும், பின்பு ஏன் ஒன்றுகூட மனிதனின் செயல்களை பின்பற்றவில்லை?  

* மிருககாட்சி சாலைகளில் உள்ள புலிகளுக்கும், நரிகளுக்கும் வெந்த கறியை ஒருநாள் உணவாக கொடுத்தால், அது என்ன செய்யும்? மறுநாள் அதற்கு பச்சை கறியை உணவாக கொடுத்தால், அப்போது என்ன செய்யும்? மூன்றாவது நாள் இரண்டு வகை கறித்துண்டுகளையும், அருகருகே வைத்தால், முதலில் எதை உண்ணும்?

*ஒருவேளை, அவைகள் வெந்த கறித்துண்டுகளையே விரும்பும் பட்சத்தில், அவற்றின் அருகில் ஒரு அடுப்பை வைத்து, கறித்துண்டுகளை சுடுகின்ற செயல் முறையை, அவற்றிக்கு சில காலம் காண்பித்தால், அவைகள் அச்செயலை பின்பற்றுமானால், அதை தொடர்ந்து அடுப்பு பற்றவைக்கும் செயல் முறைகளை கற்றுக்கொடுத்தால், ஒருவேளை அதையும் அவைகள் சரியாக செய்யும் என்றால், நாம் அவற்றை என்ன செய்வோம்?

* என் அனுபவத்தில், காகம்! மிக்சர், முறுக்கு என்றால் விரும்பி உண்ணும்! உளுந்து வடையும், பருப்பு வடையும் வைத்தால், முதலில் பருப்பு வடையைதான் தூக்கிச் செல்லும்! சாதமும், அப்பளமும் வைத்தால், முதலில் அப்பளத்தைதான் உண்ணும்! காரசாரமாக, மொருமொரு என்றிருப்பதை, காகம்! ஏன் விரும்பி உண்கிறது? 

* சாதத்தில் பாலுற்றி பிசைந்து வைத்தால், அதை நீயே திண்ணு! என்கிறது, என்வீட்டு நாய்! அதில் கொஞ்சம் பெடிகிரியை பொடி செய்து கலந்து வைத்தால், ஏன் ஒரு பருக்கைக்கூட மிஞ்சுவதில்லை?

*நம்மைத்தவிற மற்ற உயிரினங்களும் சுவையான உணவிற்கு முக்கியத்துவம் அளிகின்றதுதான்! ஆனால் அவைகள், தனக்கு கிடைக்கின்ற உணவுகளை சுவையாக மாற்றும் முயற்சிகளில், ஏன் இடுபடுவதில்லை?

* தன்னைச் சுற்றி நடக்கின்ற அனைத்து செயல்களிலிருந்தும், அனைத்து உயிரினங்களில் இருந்தும், பாடங்களை கற்றுக்கொண்டே இருப்பதனால்தான், மனிதனால்! முடிவில்லா வளர்சியை தொடரமுடிகிறது!  அப்படி எல்லாவற்றையும் பார்த்து காப்பியடிக்க துவங்கிய மனிதன்! எதனைப் பார்த்து, காப்பியடிக்கின்ற குணத்தைப் பெற்றான்???

தனக்கு வேண்டிய இடத்தில் நெருப்பை பற்றவைத்தது மட்டுமல்லாமல், மேல் நோக்கி மட்டுமே எரிந்துகொண்டிருந்த நெருப்பை, எத்திக்கும் எரியச்செய்து, தன் தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்துகொள்கிறான் மனிதன்!

"டீ, காப்பி, சாக்லேட், பிஸ்கட், போன்ற உணவுப் பொருள்களும் பீர், ஒயின், பிராண்டி போன்ற, மது பானங்கள் உற்பத்தி செய்கின்ற பெரும் நிருவனங்களில், சுவை நிபுணர்களாக ஆண்களே இருகின்றனர்! பெரும் நட்சத்திர உணவு விடுதிகள் முதற்கொண்டு தள்ளுவண்டி உணவகம் வரையிலும், ஆண்களே தலைமை சமையல்காரர்களாக உள்ளனர்!"

இதன் காரணமாக, இந்த ஒற்றைக் கருத்தை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, ஆதிகாலம் முதலே திண்கின்ற சோறு சுவையானதாக இருக்க வேண்டும் என்பதில், ஆண்கள்தான் அதிகம் கவனம் செலுத்தியிருப்பார்கள், ஆண்களின் நாவிவால்தான், இப்புவுலகம் மேன்மேலும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது! என்று என் கருத்துக்களை பதிவுசெய்கின்றேன்! கதை லாஜிக்காக இருப்பதனால், இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை! 

வேற்று கிரகவாசிகள், மனிதனை பூமியில் விட்டுச்சென்றிருக்கலாம்! அல்லது யாகம் வளர்ப்பதற்காக "அவாளுக்கு" மட்டும் நெருப்பை பற்றவைக்கும் ரகசியத்தை, அக்கினி பகவான்! கனவில் வந்து கற்றுத்தந்திருக்கலாம்! 

உதட்டைக் கடித்து, சிரிப்பை அடக்கிக்கொண்டு, என்னுடைய கேள்விகளுக்கு, பதில் தெரிந்தவர்கள், தயைகூர்ந்து தங்களின் மேலான பதில்களையும், கருத்துக்களையும் பதிவிட்டுச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! 
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நான் நெருப்பைக் கொண்டு தொழில் செய்பவனாக இருக்கின்றேன்! என் வாழ்நாளில், என் கண்கள் அதிகம் பார்த்துக்கொண்டிருப்பது, நெருப்பைத்தான்!

எனக்கும் நெருப்பிற்கும் உள்ள காதல் மிக மிக சூடானது, என் அன்பிற்குரிய நெருப்பு! என்னையும் கட்டித் தழுவிக் கொள்ளும் நாளுக்காக நான் காத்திருக்கின்றேன்!

                        

                                                         நன்றி!


தாயே பராசக்தி! 2013 www.ramukavis1983.blogspot.in
லூசாப்பா, நீ? 2017 www.lusappani.blogspot.in
இப்பொழுது! 2020 www.eppoluthu.blogspot.in


ப. சிவக்குமார்

what's app +91 9790600183 

ramukavis1983@gmail.com


137, குப்புசாமி நகர்,

சின்னவேடம்பட்டி,

கோயமுத்தூர் – 641049.

No comments:

Post a Comment

THE FIRE

                                                            நெருப்பு! மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக கருதப்படும் நெருப்பு! அதை எப்படி தனக்கு ...